தகவல்களை திருடும் ஹேக்கர்களை தடுக்க டிமா பிஸினஸ் சொல்யூசன்ஸின் புதிய தீர்வு

கோவை, மருத்துவமனை மற்றும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை… தொலைவில் உள்ள பணியாளர்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்’ என, தினமும் முன்னணி செய்தி தாள்களில் வரும் தலைப்புகள் நமது கவனத்தை ஈர்த்து வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலாலும், ஊரடங்காலும் உலகம் வலுவான பொருளாதார பாதிப்பில் உள்ளது. அதேசமயம், இணையத்தளத்தின் வாயிலாக நுழைந்து தகவல்களை திருடும் ஹேக்கர்களை நாம் அனுமதிக்க கூடாது. பாதிப்பிற்கு பின்னர் தீர்வை தேடுவதை விட, சரியான நேரத்தில் பிரச்னையை சந்திப்பது எவ்வளவோ நல்லது. எனவே, நமது கணிணிகளையும் கருவிகளையும் இணைக்க சக்தி வாய்ந்த பாதுகாப்பு அவசியம்.

நமது கருவிகள் முறையான பாதுகாப்புடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலின்றி போன், டேப்லெட் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை தற்போதைய நிலையில் இருப்பது அவசியம். டிஎன்எஸ் (DNS) அளவிலான பாதுகாப்பு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. 91 சதம் வைரஸ், டிஎன்எஸ் வழியாகவே நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவில் 2019ல், டிஎன்எஸ் பாதுகாப்பு குறித்து ஐடிசி நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் 82 சதம் தாக்குதல்கள் டிஎன்எஸ் வழியாகவே நடந்துள்ளது. இந்த வகையான அச்சுறுத்தலுக்கு வழக்கமான முறையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு போதுமானது அல்ல, இவற்றை எளிதாக தவிர்க்கும்.

கோவையை சேர்ந்த ஸ்டார்ட்அப் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிமா பிஸினஸ் சொல்யூசன்ஸ், புதிய மிகவும் சக்தி வாய்ந்த தீர்வுகளை கருவிகள் வாயிலாக பயன்படுத்த உருவாக்கியுள்ளது. ‘டிமா வாரியார்’ என்ற அதன் பெயருக்கு ஏற்ப, ரான்சம்வேர், மால்வேர், பிஷிங், கிரிப்டோ மைனிங், கமாண்ட் அன்ட் கன்ட்ரோல், டொமைன் ஜெனரேஷன் அல்கரிதம், டிஎன்எஸ் பூபிங் மற்றும் டிஎன்எஸ் ரீபைன்டிங் போன்றவைகளுக்கு எதிராக இது போராடும்.
டிமா வாரியார்,  அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப அடிக்கடி மேம்படுத்தப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது. எளிதாக பயன்படுத்துவும், எளிதாக தீர்வுகளை பெறவும், உடனடியாக செயல்படும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதிகவேக இணைய இணைப்பிற்கு மிக குறைந்த கால அளவிற்குள் செயல்படும். மிகவும் எளிதான தரவு கட்டமைப்பை கொண்டிருப்பதால், ஒவ்வொரு மணி நேரத்திலும் அன்மைப்படுத்தும்.

கொரோனாவை உலகமே எதிர்த்து போரிடும் இந்த தருணத்தில் அறிமுகமாகும், ஊரடங்கு சமயத்தில் இலவசமாக தர முடிவு செய்துள்ளோம். இந்த வகையில், கொரோனாவை ஒழிக்க பாடுபடும் நிறுவனங்களுக்கும் அரசுக்கும், இணைய அச்சுறுத்தலை ஒழிக்க உதவி வருகிறோம். மேலும் விபரங்கள் அறிய எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், எங்களது தயாரிப்பை பயன்படுத்த உதவி செய்கிறோம்.


இதுகுறித்து டிமா பிசினஸ் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜ் பழனிசாமி கூறியதாவது, இணையத்தள பாதுகாப்புக்கென நாங்கள் உருவாக்கியுள்ள இந்த தீர்வு, ‘இந்தியனாய் இரு இந்திய பொருளை வாங்கு’ அரசின் கொள்கைக்கு உட்பட்டது. ஆம், இந்த பொருள், இந்தியர்களால் உருவாக்கப்பட்டது இந்தியாவில் உருவானது. நாட்டிற்கு நன்றி செலுத்தும் வகையில், ஊரடங்கு நாட்களில் இதை இலவசமாக வழங்கியுள்ளோம். இணையத்தள அச்சுறுத்தலை நாங்கள் பார்த்துக்  கொள்வோம்; நீங்கள், பாதுகாப்பாகவும், நலத்தோடும் இருங்கள். நாட்டிற்கும், உங்கள் நிறுவனங்களுக்கும் தங்குதடையில்லா சேவையை செய்வோம்,’’ என்றார்.

மேலும் விபரங்களுக்கு www.dimabusiness.com என்ற இணையத்தளத்தில் அல்லது warrior@dimabusiness.com மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.