மோடி கிச்சனுடன் இணைந்து செயல்படும் கந்தா உணவகம்

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதிகளில் தினம் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்க கூடிய மோடி கிச்சன் நிகழ்ச்சி கோவை மாவட்ட பாஜக சார்பில் துவக்கி வைக்கப்பட்டது.

ஆதரவற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோருக்கான உணவு வழங்கும் சேவையை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகிறது. காவல்துறையினரும் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், மற்றும் பீளமேடு பகுதிகளில் உள்ள ஆதரவற்ற மற்றும் ஏழை மக்கள் 500 பேருக்கு தினம் உணவு வழங்கும் வகையிலான மோடி கிச்சன் துவக்க ஏற்பாட்டை சிங்காநல்லூர் கந்தா உணவகம் சார்பில் அதன் உரிமையாளரும், பாஜக பிரமுகருமான தேவராஜ் பழனிச்சாமி செய்திருந்தார்.இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை பாஜக மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், கோவை மாநகரில் மட்டும் 27 இடங்களில் பாஜக சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். இச்சேவை பணியை பாஜகவுடன் இணைந்து கந்தா உணவகமும் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.