ஆன்லைன் கல்வி வளாகமாக மாறிய என்.ஜி.பி. கல்லூரி

இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர்.பொற்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொரோனா ஊரடங்கு விடுமுறை நிலையில் உள்ளதால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி இரண்டு வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரியில் பயிலும் 2,500-க்கும் மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் யூ ஜி சி யின் அறிவுறுத்தலின் படி வீட்டில் இருந்தபடியே பாடங்களை ஆன்லைன் வகுப்புகளாக அறிமுகப்படுத்தியுள்ளது. துறைத் தலைவர்கள் மூலம் ஆன்லைன் செயலி வகுப்புகள் எடுப்பதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் உருவாக்கப்பட்டுள்ளது. கூகிள்-கிளாஸ்ரூம், ஜூம், கஹுட், தேசிய அளவிலான மேம்பட்ட கற்றல் நடத்தும் ஸ்வயம் மற்றும் எட்மோடோ ஆகிய ஆன்லைன் கருவிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் மடிக்கணினிகள் மற்றும் ஆன்டாராய்டு செல்லிட பேசிகளைப் பயன்படுத்தி ஆன்லைன் கற்றலை மிக எளிதாகப் பின்பற்றலாம். மாணவர்கள் வீடுகளில் இருந்தபடி, பேராசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகளைக் கேட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் வருகை உள்நுழைய(Login) குறிப்பு மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கட்டாயம் ஆன்லைன் வகுப்பை தொடர வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர மாணவர்களுக்கு டுடோரியல் எனப்படும் தேர்வுகளையும் ஆன்லைன் மூலம் எழுத வேண்டும். இல்லையெனில் அவர்கள் மதிப்பெண்களை இழப்பார்கள். இந்த டுடோரியல்களை எழுதும் போது மாணவர்களை மேற்பார்வை செய்வது அவசியமில்லை. இந்த ஆன்லைன் டுடோரியல்கள் புத்தகங்களைப் பயன்படுத்தியே எழுதும் வகையில் இருக்கும்.
மாணவர்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.
ஆகையால் மாணவர்களுக்கு ஆன்லைனெனில் கற்றதிலின் படி தேர்வுகளை ஆன்லைன் செயலி மூலமாக நடத்தும்படி நிர்வாக குழு செயலாளர், முதல்வர் மற்றும் துறைத் தலைவர்கள் முடிவு செய்ய பட உள்ளனர்.
இதற்கான மதிப்பெண்கள் தேர்வு எழுதிய பின்பு இணையவளியாகவே மதிப்பெண்களையும் உடனடியாக மதிப்பிடப்படும்.
கல்லூரி மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் ஆய்வக படிப்புகளை நடத்துவதில் அதிக கவனம் செலுத்தவும், வகுப்பறை படிப்புகளில் குறைந்த கவனம் செலுத்தவும் கல்லூரி திட்டமிட்டுள்ளது.

கொரோனா விடுமுறைக் காலத்தில் பேராசிரியர்களுக்கும் திறன் வளர்ப்பு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான பாடத் திட்டங்களைப் பதிவு செய்வதோடு மாணவர்களின் வருகையையும் பராமரிக்க வேண்டும். பல ஆசிரியர்கள், குறிப்பாக இளம் ஆசிரியர்கள், இப்போது ஆன்லைன் மூலம் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல பேராசிரியர்களும் இப்போது ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரிப்பதில் தீவிரமாக உள்ளனர்.
இந்த விடுமுறை கால பணிகள் அனைத்தும் துறைத் தலைவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன. நிர்வாக குழு செயலாளர், முதல்வர் மற்றும் துறைத் தலைவர்கள் கூட்டமானது வாரத்திற்கு இருமுறை கல்லூரி முதல்வரால் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களை மைக்ரோசாப்ட் டீம் என்ற மற்றொரு ஆன்லைன் கருவி மூலம் கல்லூரி முதல்வர் நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.