தனிமையை தவிர்க்க உதவும் இசை

உலகத்தின் அனைத்து நாடுகளிலும் கோரோனா என்ற வார்த்தை அதிகமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. இதன் பரவலை தவிர்க்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது வாழ்வில் மக்கள் குடும்பங்களுடன் பொழுதினை கழிக்கின்றனர். சிலர் செய்திகள், படங்கள், பப்ஜி, டிக்டாக், குழந்தைகளுடன் விளையாட்டு என சலிக்கும் வரை பொழுதினை கழிக்கின்றனர். அதற்கு மேல் இவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கேக்க ஆரம்பிக்கின்றனர்.

இசைக்கு மாற்றாக என்றும் எதுவும் இருந்ததில்லை. எம்எஸ்வி முதல் அனிருத் காலம் வரை பாடல்கள் மீதான மயக்கம் குறைந்ததில்லை. இசை என்றும் அழியாதவை என்பதால் யாரும் இதனை வெறுப்பதில்லை. மற்றவைகளை போல் இசையை முழுமையாக அமர்ந்து கவனிக்க தேவை இல்லை. படம் பார்த்தாலோ, விளையாடினாலோ அதில் முழு கவனம் செலுத்த வேண்டியது இருக்கும்.

ஆனால் இசையை பொருத்த வரையில் ஒரு பக்கம் பாடல் கேட்டு கொண்டு இன்னொரு மற்ற வேலைகளை செய்யலாம். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்யமுடியும் என்பதால் தான் என்னவோ இசை நம்முடன் ஒட்டிக்கொண்டுள்ளது. இந்த இசையும் இசை ஜாம்பவான்களும் தான் நமது இந்த வாழ்க்கை பயணத்தை வழிநடத்தி வருகிறார்கள்.

இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் இசையும், இசை ஜாம்பவான்களும் இல்லாவிட்டால் என்னவேன் என்று கீபோர்ட் வாசித்த படி வீடியோ பதிவினை பதிவேற்றியுள்ளார்.

இது உண்மைதானே இசைக்கு மாற்று பொருள் உண்டா என்ன. இசை என்றாவது சலித்தது உண்டா. எந்த மொழி அழிந்தாலும் இசை மொழி அழியாது.