கோப்பையை கைப்பற்றியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி

கோவை, 53ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடை பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இறுதிப் போட்டி இன்று (31.08.2017) நடைபெற்றது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து இந்திய ராணுவ அணி விளையாடியது.  இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 77 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய இந்திய ராணுவ அணி 59 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.

முன்னதாக நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் விஜயா வங்கி மற்றும் பஞ்சாப் போலீஸ் அணிகள் மோதின, இதில் பஞ்சாப் போலீஸ் அணி 95 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும் எதிர்த்து விளையாடிய விஜயா வங்கி அணி 72 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்தன.

இறுதிப் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ். தலைமை தாங்கினார். சி.ஆர்.ஐ பம்ப், நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும்  கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி. செல்வராஜ் அவர்களும். பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர்  டாக்டர். ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் எஸ்.என்.ஆர் நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற இந்திய ராணுவ அணிக்கு ரூ.50 ஆயிரமும், முன்றாம் இடம் பிடித்த பஞ்சாப் போலீஸ் அணிக்கு ரூ. 25 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த விஜயா வங்கி அணிக்கு ரூ. 15 ஆயிரமும், சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசாக ரூ.10 ஆயிரம் இந்திய ராணுவம் அணியின் விக்கி ஹுடா அவார்களுக்கு வழங்கப்பட்டது.