வெஸ்டர்ன் காட்ஸ் பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட களப்பயணம்

கோவை, வெஸ்டர்ன் காட்ஸ் பள்ளி மாணவர்கள் அண்மையில் களப்பயணம் மேற்கொண்டனர். முதலாவதாக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றனர். காவல்துறை துணை கமிஷனர் லட்சுமி, மாணவர்களை வரவேற்றார்.

போக்குவரத்து துறையின் பணிகளையும், சட்டங்களையும், தண்டனைகளையும் விளக்கினர். பிறகு மாணவர்கள் காவல்துறை கண்காணிப்பு அறையை ஆர்வமுடன் பார்வையிட்டனர். அங்கு நிர்வாக செய்வது மற்றும் காவலர்களுடன் எவ்வாறு தகவல் பரிமாறப்படுகிறது என்பதையும் கேட்டறிந்தனர். களப்பயணத்தின் சிறப்பாக மோப்ப நாய்களின் கண்காட்சி அமைந்தது. போதை பொருட்கள், ஆயுதங்கள், மற்றும் திருடர்களை எவ்வாறு மோப்ப சக்தியில் நாய்கள் காவலரின் கட்டளைக் கேற்ப பணி செய்தது பாராட்டுக்குரியது.

மேலும், இணைய குற்றவியல் துறையை பார்வையிட்டு மொபைல் போன் மற்றும் கம்பியூட்டர் வாயிலாக இணையத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டனர். இறுதியாக மாநகர பந்தைய சாலை (C2) காவல் நிலையத்தை பார்வையிட்டு அங்கு, காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி நிலையத்தில் உள்ள வாகனங்கள், நவீன ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பதிவேடுகள் பற்றி விளக்கி கூறினார். இவ்வாறு கோவை மாநகர காவல்துறையின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை வெஸ்டர்ன் காட்ஸ் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் அறிந்து கொண்டனர்.