ஜெம் மருத்துவமனையில் உடல்பருமன் பற்றிய தேசிய மாநாடு

 

கோவை, ஜெம் மருத்துவமனை வளாகத்தில் உடல்பருமன் மேலாண்மை பற்றிய தேசிய மாநாடு ஒபிஸிகான் – 3 2017 அண்மையில் நடைபெற்றது. இந்த ஒபிஸிகான் தேசிய மாநாடு கடந்த 2015ல் தென்னிந்தியாவில் முதன்முறையாக ஜெம் மருத்துவமனையினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மாநாட்டில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், சுரப்பியல் மருத்துவர்கள், சர்க்கரை நோய் நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள், உளநோய் மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய் அறுவை சிகிச்சை மையம் மூன்று மாத உடல் பருமன் அறுவை சிகிச்சையின் ஒருங்கிணைப்பாளர் ஆன்லைன் படிப்பை உணவியல் நிபுணர்களுக்கும், இத்துறை மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இம்மாநாட்டில் பதிவு செய்தவர்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்பட்டது. சமீபத்திய ஆய்வுகள் இந்திய பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிக பருமனாகவும், குழந்தைகள் உடல் பருமனும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 1975ம் ஆண்டு 19ம் இடத்திலிருந்த இந்திய ஆண்கள் 5ம் இடத்திலும், இந்தியப் பெண்கள் 3ம் இடத்திலும் 2014ம் ஆண்டிலிருந்து இது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. உடல் பருமன் மற்றும் அதன் தொடர்பான நோய்களுக்கு ஜெம் மருத்துவமனை கடந்த 2003ல் உடல் பருமன் அறுவை சிகிச்சை மையம் துவங்கி தென்னிந்தியாவின் முதல் மற்றும் ஒரே சர்வதேச சிறப்பு மையம் என்றும் அமெரிக்க சான்று பெற்றுள்ளது. இம்மையத்தின் தலைவரும் ஜெம் மருத்துவமனையின் இயக்குனருமான டாக்டர் பிரவீன் ராஜ் சர்வதேச உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்களை பொதுமக்களுக்காக இலவசமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.