5 வயது மகனுக்கு தாய் கல்லீரல் தானம்

கல்லீரல் செயல் இழந்த சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு கோவை ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டது.

குழந்தை பிறந்த முதல், கல்லீரல் செயல் இழக்க தொடங்கியது. கொஞ்சகொஞ்சமாக செயல் இழந்த கல்லீரல் முழுமையாக செயல் இழந்துவிட்டது. அந்த சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்ற நிலையில் சிறுவனின் தாய் கல்லீரல் தானம் செய்ய முன் வந்தார். சென்ற வாரம் லேப்பிராஸ்கோப் மூலம் கல்லீரலின் ஒருபாகம் (150gm) எடுக்கப்பட்டது. மகனின் செயல் இழந்த கல்லீரல் நீக்கப்பட்டு தாயின் கல்லீரல் பொருத்தப்பட்டது. கல்லீரல் தானம் செய்த தாய் 3 நாட்களில் குணமடைந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மகன் 8 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார்.

சிறுவயது குழந்தைகளுக்கு பலவகையான கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன, பலருக்கு கல்லீரல் முழுமையாக செயல்படாமல் போவதுண்டு, இச்சூழ்நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் உயிர் காப்பு சிகிச்சையாகும். உடலின் எடைக்கேற்ற 150 – 300 gm  வரை கல்லீரல் தானம் போதுமானது. இரத்த குழாய் மிகவும் சிறிதாக இருப்பதால் மைக்ரோ சிகிச்சை மூலம் இணைக்கப்படுகிறது தானம் செய்தவர்களின் கல்லீரலும் 3 – 2 மாதங்களில் வளர்ந்து விடும்.

5 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் டாக்டர்.சுவாமி நாதன், டாக்டர்.ஆனந்த் விஜய், டாக்டர்.விக்னேஷ், டாக்டர்.பிரபாகரன், டாக்டர்.ஜெகநாதன், டாக்டர்.கான், டாக்டர்.ஸ்ரீதர் ஆகியோரை ஜெம் மருத்துவமனை முதன்மை மருத்துவர் வெகுவாக பாராட்டினார் மற்றும் முதலமைச்சர் ஒருங்கிணைந்த உயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்த தமிழக அரசுக்கு நன்றி கூறினார்.

லேப்பிராஸ்க்கோப் மூலம் கல்லீரல் மாற்று அறுவை முதன் முதலாக பிரான்சு நாட்டில் 2003 செய்யப்பட்டது. கொரியா, தைவான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் லேப்பிராஸ்கோப் முறையில் கல்லீரல் தானம் சிகிச்சை பிரபலமடைந்துள்ளது. கோவை ஜெம் மருத்துவமனை இந்தியாவில் முதன்முறையாக லேப்பிராஸ்கோப் கல்லீரல் தானம் சிகிச்சை செய்யப்பட்டது. குறைந்த வயதில் லேப்பிராஸ்கோப் கல்லீரல் தானம் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். லேப்பிராஸ்கோப் முறையில் கல்லீரல் தானம் செய்பவர்கள் சில நாட்களிலேயே குணமடைகின்றனர். வலி இருப்பதில்லை, சீழ்கட்டும் வாய்ப்பில்லை, ஹெர்னியா உருவாகும் வாய்ப்பும் இல்லை.