சி.எம்.எஸ் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

சின்னவேடம்பட்டி சி.எம்.எஸ். அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 32வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆசிய படகு வீரர் இலக்ஸ்மண ரோகித் மறடப்பா கலந்து கொண்டார்.

சி.எம்.எஸ் கல்வி மற்றும் அறக்கட்டளையின் தலைவர் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்த இந்த விழாவில், கலந்து கொண்டவர்களை சி.எம்.எஸ். கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தியாமேனோன் வரவேற்றார். கல்லூரியின் விளையாட்டுத் துறை இயக்குனர் தேவராஜ் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் சி.எம்.எஸ். கல்வி மற்றும் அறக்கட்டளையின் உதவி தலைவர் ஆர். விக்ரமன், செயலாளர் வி. சந்திரகுமார், இணைச் செயலாளர் பி. விஜயகுமார், பொருளாளர் பி.ரவிக்குமார் மற்றும் தேர்வுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.பி. முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாணவ மாணவியர்களுக்கான உள் விளையாட்டுப் போட்டிகள் புளு, பிரவுன், ஆரஞ்ச், கிரின், பின்க் மற்றும் ரெட் என ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இவர்களுக்கு கால் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து, எறிபந்து, கோ-கோ மற்றும் ஓட்டப்பந்தய போட்டிகள் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

இறுதியில் அனைத்து வித விளையாட்டு போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று ரெட் குழு முதலிடம் பிடித்தது. இரண்டாமிடத்தை கிரின் குழுவும் பிடித்தது.

விழா முடிவில் உடற்கல்வி துறை தலைவர் எ. ஏஞ்சல் ராபர்ட் நன்றி கூறினார். இந்த விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை அட்மினிஸ்ட்ரேஷன் டீன் வி. சுஜாதா மற்றும் அகாடாமிக் டீன் ஹெச்.ஆர். விவேக் ஆகியோர் செய்திருந்தனர்.