கேபிஆர் கலை கல்லூரியில் இங்கிலிஷ் ஸ்பீக்கிங் சவ்வயர் ஃபேர்

கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில், ஆங்கிலத்துறை – ஃபேண்டசி 2020 சார்பில் இங்கிலிஷ் ஸ்பீக்கிங் சவ்வயர் ஃபேர் (ஆங்கிலப் பேச்சு திறன்) எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி ஆங்கில அறிவும் பேச்சு திறனும் நம் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. உலகில் உயர் நிலையை அடைந்த ஒவ்வொரு சான்றோர்களும் ஆங்கில திறமை உள்ளவர்கள். உலகளாவிய மொழியாக ஆங்கிலம் உள்ளதால் நாம் ஆங்கில அறிவை கண்டிப்பாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும், இதன் மூலம் வாழ்வில் நாம் மிகப்பெரும் வெற்றியை அடைய முடியும் என்று கூறி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த கேப்டன் நீலகண்டன், ஆங்கிலம் என்பது உலகளாவிய மொழியாக உள்ளதால், அதனை கற்றுக் கொள்ளுதலும் சரியாக பேசுதலும் அவசியமாக உள்ளது. ஆங்கிலம் பல மொழி வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும் இலகுத்தன்மை வாய்ந்த மொழியாக உள்ளதால் சரியான உச்சரிப்போடும், தொனியிலும் பேச வேண்டும். ஆங்கிலம் கற்றுக்கொள்ள மிக எளிமையான மொழி. ஆகவே கூச்சமில்லாமல் பேசிபழகினால் மிக எளிதில் கற்றுக்கொள்ள முடியும். ஸ்டிவ் ஜாப்ஸின் Stay hungry, Stay foolish என்ற கூற்றிக்கிண்ணங்க எப்போதும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு இறுக்கவேண்டும். எப்போதும் ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளும்போது  LSRW, L- Listen, S – Speaking, R – Righting. W – Writing என்ற நிலையில் கற்றுக்கொள்ள வேண்டும். படிக்கும் பழக்கமே ஒரு மனிதனை முழுமையாக்கும் என்று கூறினார்.

பேசும் பயிற்சி தசைப்பகுதிகளை எளிமையாக்கி உச்சரிப்பை மேம்படுத்தும். ஆங்கிலம் பேசும் போது ஏற்படும் தவறுகளைக் கண்டு அஞ்சாமல் இலக்கண அறிவை மேம்படுத்த முயற்சி செய்யவேண்டும். ஆங்கிலம் பேசும்போது 55% உடல் மொழியையும், 38% பண்பேற்றத்தையும் (Modulation), 7% வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டும். என்று கூறினார். மேலும் மாணவர்களுக்கு ஆங்கில வார்த்தைகளை எவ்வாறு உச்சரிக்கவேண்டும் என்று பயிற்சியளித்தார். மாணவர்கள் ஆர்வமாக வார்த்தைகளை உச்சரித்துப் பழகினார்கள்.