ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சினாரியோ 2020

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சினாரியோ 2020 என்னும் கலாச்சார கலை விழா நடைபெற்றது. இவ்விழாவினை கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் கு.கருணாகரன் குத்து விளக்கு ஏற்றி தலைமை ஏற்று  அவர் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் சு.தீனா மற்றும் முதன்மையர்கள் மற்றும் இயக்குனர்கள் பங்கு கொண்ட இவ்விழாவில் மாநில அளவில் 70க்கு மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டனர்.

இதில்  பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில்   திரைப்படத் துறை சார்ந்த நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பல முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

இவ்விழாவினை மாணவர் மன்றம் மற்றும் கவின் கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.