மாணவர்கள் நாட்டின் மிகப்பெரிய சக்தி

-ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்தியா கல்லூரியில் நடிகர் சூரி பேச்சு

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்தியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “அதிருத்ரா” கலை பண்பாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

முதல்வர் பழனியம்மாள் தலைமையேற்று விழாவினை தொடங்கிவைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்துகொண்டு கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் சாதனைபடைத்த மாணவர்களுக்கு, நினைவு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, மாணவர்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய சக்தி மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். எனவே சிறப்பாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்தார். புதிதாக கல்லூரியில் சேரவரும் வசதி இல்லாத ஏழை மாணவர்களை கட்டணம் குறைவாக இருந்தாலும் கனிவுடன் கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு உதவவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இதில் கலந்துகொண்ட மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் சூரி கலகலப்பாக பதில் அளித்தார். இதனால் மாணவர்கள் உற்ச்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.