தமிழகத்தில் கொரனாஅறிகுறி?

உலகையே அதிர வைத்துக்கொண்டிருக்கும் ஒற்றை பெயர் தற்போது தமிழகதிற்கு இடது கால் வைத்து வந்துள்ளது.

சீனாவில் மருத்துவப் படிப்பு படித்து வந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த விஸ்வநாத் என்ற மாணவர் கடந்த 15-ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு சளி தொந்தரவு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை போக்குவரத்து கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சீனாவில் இருந்து ஈரோடு திரும்பிய மருத்துவ மாணவருக்கு கொரனா அறிகுறி இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என புகார் தெரிவித்துள்ளார். தமிழகம் இதற்கு தயாராக இல்லை என்று தான் இதன் மூலம் தெரிகிறது.