இந்துஸ்தான் கல்லூரியில் திரைப்பட விழா 2017

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் திரைப்பட விழா 2017, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனுடன், இந்தோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் மற்றும் இந்துஸ்தான் காட்சித் தொடர்பியல் துறை இணைந்து நடத்தியது. விழாவில் ஸ்லோவேனியா அமைச்சர் மத்தேஜா வோத்தேப் கோஷ் மற்றும் தமிழ் திரைப்படத் தொகுப்பாளர் பி.லெனின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி கண்ணையன், இந்தோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசனின் முதன்மை செயலர் இ.தங்கராஜ், கல்லூரி முதல்வர் கே.எம்.சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், ‘தி காமெடி ஆப் டியர்ஸ்’ என்ற ஸ்லோவேனியா திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும் திரைப்படம் குறித்து ஆரோக்கியமான விவாதங்களும் நடைபெற்றது.