‘கலாம்-2’ திட்டத்துக்கான செலவுகளை ஏற்கிறது லட்சுமி விலாஸ் வங்கி

ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனம் என்.எஸ்.எல்.வி கலாம் – 2 என்ற பெயரில் செயற்கைகோள் திட்டத்தை தயாரித்துள்ளது. இது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு நிதி உதவி செய்ய முன்னணி தனியார்  வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி முன் வந்துள்ளது. ரஷ்யாவில் மட்டுமே செயல்படுத்தப்படும் ஸ்பேஸ் டூரிஸத்தை இந்தியாவிலும் ஊக்கப்படுத்தும் விதமாக ஸ்பேஸ் கிட்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ளமாணவர்கள்  விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் 6 பேர் உட்பட 8 மாணவர்கள் விண்வெளியில் பிரிண்டிங்  செய்வது சாத்தியமா என்பதை கண்டறிய என்.எஸ்.எல்.வி.கலாம் 2 என்ற பலூன் செயற்கைகோளை புதிதாக உருவாக்கியுள்ளனர்.

அதில் பிரிண்டருடன் 50 பக்கங்கள் கொண்ட பேப்பரையும் வைத்துள்ளனர். அதற்கேற்றவாறு செயற்கைகோளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த செயற்கைகோள் விண்ணுக்கு சென்றவுடன் அப்துல் கலாமின் உருவத்தைபிரிண்டிங் செய்து அனுப்பும். இந்த திட்டத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஏற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி அல்லது  31-ம் தேதி இதை நாசாவிண்ணில் செலுத்துகிறது.

இந்தநிலையில்ஸ்பேஸ் கிட்ஸ் பற்றி அறிந்து பள்ளிமாணவர்கள் தயாரித்த கலாம் செயற்கைகோள் முழு திட்ட செலவையும் லட்சுமிவிலாஸ் வங்கி ஏற்றுக்கொண்டது. மேலும் விண்வெளி ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கி வரும் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்துடன் அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ள போட்டி திட்டங்களுக்கு உதவ உள்ளதாக இந்த வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து வங்கியின் மேலாண் இயக்குனர்  பி.முகர் ஜி கூறுகையில், “என்.எஸ்.எல்.வி.கலாம் – 2 திட்டத்துக்கு லட்சுமி விலாஸ் வங்கி முழு ஆதரவு அளிக்கிறது.

மேலும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் திறன்களை வளர்க்க லட்சுமி விலாஸ் வங்கி உறுதி பூண்டுள்ளது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்புடன் இணைந்து பல பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில் மாணவர்களை ஈடுபடுத்துவது சிறந்த ஒன்று. மாணவர்களை தலைச்சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க அனைவரின் பங்கும் அவசியம். இது போன்ற பங்களிப்பு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த வழிவகுக்கும்.”என்றார;.

இது குறித்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் ஸ்ரீமதிகேசன் கூறுகையில்,“லட்சுமி விலாஸ் வங்கி உதவி வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். லட்சுமி விலாஸ் வங்கி போன்ற நிறுவனங்களின் உதவிகள் நம்பிக்கையையும் மனவலிமையையும் அதிகரித்துள்ளன. அத்துடன் விண்ணில் பறக்க முடியும் என் நம்பிக்கையை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.”என்றார்.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாசாரம் துறையில் மாணவர்களுக்கான சர்வதேச அனுபவ கற்றலை உருவாக்கும் அமைப்பாகும். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் யூரிகாகரின் விண்வெளிமையம் – ஸ்டார்; சிட்டி, மாஸ்கோ மற்றும் யூரோ விண்வெளி மையம் ஆகியவற்றிற்கு இந்திய தூதராக விளங்கி வருகிறது.

இந்தியாவில்இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குகிறது. இந்த அமைப்பின் சமீபத்திய முயற்சி ‘கலாம் சாட்’ என்றஉலகின் எடை குறைந்த செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள், 3.8 கனசென்டிமீட்டர்; உயரமும் 64 கிராம் எடையும் கொண்டது. நாசாவால் இது தேர்வு செய்யப்பட்டதுடன் உலகம் முழுவதும் பரவலாக வரவேற்பைப்பெற்றுள்ளது.