‘என்.ஜி.பி தொழில் முனைவோர் திருவிழா – 2020’

டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பாக ‘என்.ஜி.பி தொழில் முனைவோர் திருவிழா – 2020’ பாவை அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கோவை மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல.ஜி. பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். மேலாண்மை துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினர். மாணவர்களிடையே அனுபவ வழிக் கற்றல், வணிகம் செய்து பொருளீட்டுதல், அனைவருடனும் பங்கிட்டு வாழ்தல் ஆகிய நற்பண்புகள் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. உணவு பொருட்கள், ஆடை ஆபரணங்கள், புத்தகங்கள் என 60 க்கும் மேற்பட்ட வணிக அங்காடிகள் இடம் பெற்றிருந்தன. மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இத்திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும் மாணவர்களைக் கவரும் வண்ணம் விழாவில் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, கோவை மருத்துவ மையத்தின் அறங்காவலர் டாக்டர் அருண் என். பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட இயக்குநர் மதுரா வி. பழனிசாமி, முதன்மை செயல் அலுவலர் ஓ.டி. புவனேஸ்வரன், முதல்வர் வி. ராஜேந்திரன், டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முத்துசாமி, மூத்த நிர்வாக அதிகாரி நடேசன், மேலாண்மை துறைத் தலைவர் மோகன், மேலாண்மை துறை மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் 7000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.