தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் 32 ஆம் பட்டமளிப்பு விழா மற்றும் தமிழ்நாடு கட்டிடக்கலை கல்லூரியின் 9 ஆம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 450 இளங்கலை பொறியியல் மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரிகள் மற்றும் 70 கட்டிடக்கலை மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை விழாவில் பெற்றுக்கொண்டனர். தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் தலைவர் பி.வி.ரவி இவ்விழாவிற்க்கு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீனா கலந்துகொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கல்வியே நமது வாழ்க்கையின் வெற்றிக்கு திறவுகோல். படிப்பதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. வாழ்நாள் முழுவதும் நாம் எதையாவது படித்து நமது திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கை பல போராட்டங்களை கொண்டது, அதை எதிர்கொண்டு வெற்றிநடை போடவேண்டுமென்று இளம் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த தொழில்நுட்ப சகாப்தத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் நமது எண்ணங்களை இந்த சமுதாயத்திற்கு தேவையான கண்டுபிடிப்பாக மாற்றவேண்டுமென்று உற்சாகமூட்டினார். தங்களது புதிய தொழில்நுட்ப முறைகளால் 1984 முதல் இன்றுவரை பொறியியல் மாணவர்களை திறம்பட உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த கல்லூரியின் மேலாண்மைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் தலைமை செயல் அலுவலர் அனுஷா தமது உரையில் அனைத்து  பட்டதாரிகளையும் வாழ்த்திப்பேசினார். இந்த விழாவில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன், தமிழ்நாடு கட்டிடக்கலை கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சுரேஷ், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள கலந்து கொண்டனர்.