இந்துஸ்தான் கல்லுரியில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சி

-“ஹிலாரிக்காஸ்2020

கோவை, இந்துஸ்தான் கல்லூரியில் “ஹிலாரிக்காஸ் –2020” என்ற தலைப்பில் தென்னிந்தியா அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .

கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுரியில் , தென்மாநில அளவில் கல்லூரி மாணவ , மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி வரும் 14.02.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது . இக்கலை நிகழ்ச்சி இந்த ஆண்டு 20வது ஆண்டாக நடைபெறவுள்ளது .தென்னிந்திய அளவில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ , மாணவிகளும் பங்கேற்கவுள்ளனர் . இக்கலை நிகழ்ச்சியில் குழுநடனம் , தனிநபர் நடனம் , பாட்டுக்குப்பாட்டு , வினாடிவினா , முகஅலங்காரம் ,காய்கறிகளில் அலங்காரம் , பூ அலங்காரம் , கோலப்போட்டி , புகைப்படப்போட்டி இப்படி 16 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது . இப்போட்டிகளின் மூலம் மாணவ , மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்த இது ஒரு மிகச் சிறந்த மேடையாக இந்த “ஹிலாரிக்காஸ்-2020” கலை நிகழ்ச்சி அமையும் .தென்னிந்தியா அளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 150 கல்லுரிகளில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர் . வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சத்திற்க்கு அதிகமான  ரொக்கப்பரிசும் , பரிசுப்பொருள்களும் , சான்றிதழ்களும் வழங்கபடுகிறது .

கடந்த 19 ஆண்டுகளாக “ஹிலாரிக்காஸ்” என்ற கலை நிகழ்ச்சியுடன் , மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏதாவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி , இந்நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று வருகின்றனது என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிகழ்ச்சியை தமிழக மேற்கு மண்டல பெரியய்யா ஐ .பி .எ ஸ் . அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்க உள்ளார் .