கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப் பேரணி

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரி சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் RCC Windcity ரோட்ட கிளப் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப் பேரணியை சுல்தான் பேட்டையில் நடத்தியது. தற்போது நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை செயல்பாடுகள், வைரஸ் தாக்கிய பிறகு மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றை மருத்துவர் அபிநயாவும் கோவை கேன்சர் பவுண்டேசன் மருத்துவர் ஹர்ஷாவும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விரிவாக எடுத்துரைத்தனர்.

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் மாணவர்கள் நீண்ட தூரப்பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பற்றிய துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் முதல்வர் பாலுசாமி, சுல்தான்பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளர், RCC Windcity – ன் தலைவர் வள்ளிகனகராஜ்  மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.