செவிலியர்கள் தலைமைப்பண்பு குறித்த ஒருநாள் பயிலரங்கு

கோவை வட்டமலைபாளையம் கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் தமிழக நர்சிங் மற்றும் மீட் வை ஃப்ரீ கவுன்சில்  இணைந்து நடத்திய ஒரு நாள் பயிலரங்கு நடைபெற்றது .

இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு செவிலியர் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி முகாமை கங்கா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் கங்கா நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர்  ரமா ராஜசேகரன் வரவேற்புரையாற்றினார். செவிலியர் கல்லூரியில் சிறப்புகளை  மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சண்முகநாதன் பட்டியலிட்டு பேசினார்.

நைட்டிங்கேல் உருவப்படம் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவை கிளை செயலாளர் மற்றும் ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் நந்தினி ரங்கசாமியால் வெளியிடப்பட்டது. நர்சிங் கல்லூரி மாணவர்களின் சத்தியபிரமாணம், கேக் வெட்டும் நிகழ்ச்சியை தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் டாக்டர் ஆனி கிரேஸ் கலைமதி துவக்கிவைத்தார்.

இந்திய நர்சிங் கவுன்சில் இந்த ஆண்டில் குறைந்தது 20,000 இளம் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் பயனடைய வேண்டும் என்று கருத்தோடு இதுபோன்ற  பயிற்சி முகாமை நடத்தி வருகிறது. தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவக் கவுன்சில் 5,000 செவிலியர்கள் தலைமைப் பண்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் நர்சிங் குரோனிக்கல்ஸ் டாக்டர் சண்முகநாதன் வெளியிட்டார், ஆசிரியர்கள் வருகை அட்டை டாக்டர் ஆணி கிரேஸ் கலைமதி வெளியிட்டார், மருத்துவர்கள் போல் செவிலியர்களுக்கான அடையாள வாகன ஸ்டிக்கர் கங்கா மருத்துவமனையின் இயக்குனர் நிர்மலா ராஜபதி வெளியிட்டார்.  நிறைவில் டாக்டர் ஜான் கங்கா நர்சிங் முதல்வர் நன்றி உரையாற்றினார்.