இந்துஸ்தான் கலை கல்லுரி – எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி – இந்துஸ்தான் இன்ஸ்டிட்யுட் ஆப் அட்வான்ஸ் ஸ்டடீஸ், மலேசியாவின் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவின் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஹர்ச்சரன் சிங் இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயல் அறங்காவலரும் செயலருமான பிரியா சதீஸ்பிரபு ஆகியோரின் சார்பாக இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி  கையெழுத்திட்டார்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமான ஆய்வு மேம்பாடுகள், ஆசிரிய – கற்பித்தல் பரிமாற்றங்கள், கூட்டுக் கற்பித்தல், மாணவர்களுக்கான இணைந்த தொழில்முறைப் பயிற்சி, ஆய்வு நிபுணத்துவ பரிமாற்றங்கள், இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்களுக்கான மேலாய்வுகள் குறித்து துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு சிறப்புரை வழங்குதல், இணைத்து மாநாடுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் நடத்துதல் முதலியன இதில் அடங்கும்.