கோவை மாநகராட்சி 2019 ஸ்மார்ட் சிட்டி விருது

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்காக 3 வது உச்சி மாநாட்டில் கோவை மாநகராட்சி உக்கடம் சூரியமின் உற்பத்தி நிலையத்திற்காக கோவை மாநகராட்சி 2019 ஸ்மார்ட் சிட்டி விருதிற்கான சான்றிதழ் மற்றும் 5 லட்சம் ரொக்க பரிசையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடவத் பெற்றுக்கொண்டார்.

மாநகராட்சி ஆணையர்கள், ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் மாநில முதன்மைச் செயலாளார்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள், நாடு முழுவதிலும் இருந்து ஸ்மார்ட் சிட்டி மிஷனின் பங்குதாரர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

ஸ்மார்ட் சிட்டி விருதுகள் ஸ்மார்ட் நகரங்களில் காணப்படும் ஆளுகை, கட்டப்பட்ட சூழல், நகர்ப்புற சூழல், சமூக அம்சங்கள், கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம், போக்குவரத்து, நீர் மேலாண்மை, மற்றும் சுகாதாரம், ஆகிய தலைப்புகளின்கீழ் சிறப்பு அம்சங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கோவை மாநகராட்சியின் உக்கடம் சூரிய மின்உற்பத்தி நிலையத்திற்காக நகர்புறச் சுற்றுச்சூழல் பிரிவின்கீழ் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.