கலாம் கனவு நூலகம்

கோவை, துடியலூர் – மாநகராட்சி நடுநிலைப் பள்ளில் முன்னாள் குடியரசுத் தலைவர். அப்துல் கலாம் அவர்களின் கனவுகளைமெய்ப்பிக்கும் முயற்சியில் டாக்டர்.கலாம் லைப்ரேரி துவக்கப்பட்டுள்ளது. இந்நூலகமானது, The ARC Foundation – India மற்றும் Rotary Club of Heritage ஆகிய இரண்டு தன்னார்வ அமைப்புகளால் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் Rotary Club of Heritage-ன் தலைவர் கமலஹாசன், செயலாளர் ராஜேசகரன், The ARC Foundation – India அமைப்பின் நிர்வாகிகள் பரணிதரன், அபர்ணா மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்துடாக்டர்.கலாம் லைப்ரேரி – ஐ துவக்கிவைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை சுந்தரம்மாள் வரவேற்புரை ஆற்னார். Rotary Club of Heritage – ன் தலைவர் கமலஹாசன் கலாம் அவர்களின் vision 2020 பற்றியும், நூலகத்தின் அவசியத்தை பற்றியும் மாணவர்களுக்கு எடுத்து கூறினார். ARC foundation நிர்வாகி அபர்ணா, இந்நூலகத்தில் நோக்கங்களான நன்னெறிகளை கற்று கொடுத்தல்,பொறுப்பான குடிமக்களை உருவாக்குதல் மற்றும் தனக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை உணர்தல் போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தார். இறுதியாக பட்டதாரி ஆசிரியை சித்ரா நன்றி உரை வழங்கினார்.