கனடா தமிழ் சங்க விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு

கனடா தமிழ் சங்கத்தின் ‘தமிழியல் விழா 2020’ டொரோண்டோ நகரில் வரும் சனிக்கிழமை (25.1.2020) நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியில் இளையோர், பெற்றோர், ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, மேடை நிகழ்ச்சியாக தமிழ் மரபுக் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற உள்ளன.