விண்வெளியில் பறக்க ஸ்டீபன் ஹாக்கிங் திட்டம்!

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (75) விண்வெளியில் பறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொலைக்காட்சி பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: விண்வெளியில் பயணம் செய்ய வேண்டுமென்ற எனது நீண்ட நாள் ஆசை எப்படி நிறைவேறும் என்று தெரியாமல் தவித்து வந்தேன். இந்த நிலையில், வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலத்தில் எனக்கு இடமளிக்க அதன் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் வாக்குறுதி அளித்திருக்கிறார். எனது ஆசை பூர்த்தியாவது இனி அவர் கையில்தான் உள்ளது என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.
இந்த ஆண்டு இறுதியில் கலக்டிக் விண்வெளிப் பயணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பெரும் பொருட்செலவில் சுற்றுலாப் பயணிகளாக அதில் 10 பேர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.