சாலை பாதுகாப்பு வாரவிழா துவக்கம்

 

கோவை  மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற 31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தொடங்கி வைத்தார்.

இப்பேரணியானது மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி அண்ணா சிலை, குப்புசாமி நாயுடு மருத்துவமனை சிக்னல், லஷ்மி மில்ஸ் சிக்னல், பாப்பநாயக்கன்பாளையம், காந்திபுரம் நகர மற்றும் புறநகர்பேருந்து நிலையங்கள் வழியாக சென்று வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாநகர காவல் துணை  ஆணையர் (குற்றவியல்) உமா,  போக்குவரத்து மண்டல இணை ஆணையர் உமாசக்தி,  வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், குமரவேல், சரவணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்புஅபிரகாம், காவல்துறை அலுவலர்கள், மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.