பி.எஸ்.ஜி மருத்துவமனையில் குழந்தைகள் மூளை வளர்த்திறன் சிகிச்சை துறை துவக்கம்

கோவை, பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிறுவயதில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறியவும், அதனை சரி செய்து கொள்வதற்கும் புதிதாக குழந்தைகள் மூளை வளர்த்திறன் சிகிச்சை துறை துவக்கப்பட்டுள்ளது. இத்துறையினை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர்.புவனேஸ்வரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.