கேபிஆர் கல்லூரியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

கோவை மாவட்டம் உருவாகிய தினத்தை கொண்டாடும் விதத்தில் இந்த வருடம் 12வது கோவை விழாவையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரக ஒற்றுமையின் கபடியை ஊக்குவிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தியும், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என தனி தனியே இரு பிரிவுகளில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்போட்டியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து 50 அணிகள் கொண்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வெற்றி பெற்ற வீரர் வீரங்கனைகளுக்கு கல்லூரி தலைவர் கே.பி.ராமசாமி, முதல்வர் அகிலா மற்றும் மக்கள் சேவை மையத்தின் தலைவர் சேகர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சுழற் கோப்பைகளை வழங்கினர். மேலும், இதில் வெற்றி பெறும் வீரர்கள் மாநில அளவில் நடக்க கூடிய கபடி போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக கல்லூரியின் தலைவர் கேபி.ராமசாமி தெரிவித்துள்ளார்.