ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் “எப்போ வருவாரோ” நிகழ்ச்சி

முதல் நாள் நிகழ்ச்சியில் ஔவையார் குறித்து சுகிசிவம் சிறப்புரை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 2020 நிகழ்ச்சியின் முதல் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் முதல் அமர்வில் சுகிசிவம் கலந்து கொண்டு ஆன்மிக தேடலுக்கு விடையளிக்க ‘ஔவையார்’ என்ற தலைப்பில் உரையாடினார்.

இவரது உரையை கண்டு, கேட்டு மகிழ அரங்கமும், மைதானமும் நிரம்பி வழிந்த 8000 க்கும் மேற்பட்ட பொது மக்களுடன் பண்ணாரியம்மன் குழுமங்களின் தலைவர் எஸ். வி. பாலசுப்பிரமணியம், சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் ஆர். வி. ரமணி, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.