கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்

தமிழ்நாடு மட்சுஹிமா கியோ குஹின் கராத்தே அமைப்பின் சார்பாக மாநில அளவிலான குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் கேபிஆர் கல்லூரியிள் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 225 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு கராத்தே தலைமை பயிற்சியாளர் சென்சாய் குமாரசாமி 4 ப்ளாக் பெல்ட் சிறப்பு பயிற்சி அளித்தார்.

பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கேபிஆர் கல்வி குழுமத்தின் நிறுவனர் கேபி.ராமசாமி தலைமை வகிக்க, கேபிஆர் மில்லின் பெண்கள் முன்னேற்ற பிரிவின் தலைவர் பால்பாண்டியன் முன்னிலையில் கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மற்றும் தமிழ்நாட்டு மட்சுஹிமா கியோகுஷின் கராத்தே அமைப்பின் தலைவர் ரோட்டேரியன்  வள்ளி கனகராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கினார்கள். இந்த முகாமில் தற்காப்பு கலை பற்றியும் நிகழ்கால யுத்திகள் பற்றியும் விவரிக்கப்பட்டது.

நிறைவு விழாவில் கல்லூரியின் முதல்வர் பேசுகையில் தற்காப்பு கலை பயிற்சியின் மூலம் மாணவ, மாணவிகள் பாதுகாப்புடன் வாழ உதவும் என்றும் இதன் முக்கியத்துவத்தை சக மாணவ மாணவிகளுக்கும் விவரிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் நிறைவாக பயிற்சி முகாமில் ஒருங்கிணைப்பாளர் சென்சாய் ஜோதீஸ்வரன் 3rd ப்ளாக் பெல்ட்  நன்றியுரை வழங்கினார்.