ஸ்ரீ  ஆதி சங்கராசார்யா சாரதா லஷ்மி நரசிம்ம பீடாதிபதி கோவை வருக

கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டம், ஹரிஹரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா சாரதா லஷ்மி நரசிம்ம பீடாதிபதி ஸ்ரீ மத் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்ப்ரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் டிசம்பர் 10 முதல் 16 வரை பக்தர்களுக்கு கோவையில் ஸ்ரீ  ஸ்ரீ  ஸ்வாமிகள் அருள்பாலிக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு ராம்நகர் ராமர் கோவிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. டிசம்பர் 10 முதல் 16 வரை  காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சந்திரமெளலீஸ்வரர் பூஜை, காலை 10 முதல் 11 மணி வரை  ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிகளின் தரிசனமும், மாலை 6.30 முதல் 8.30 மணி வரை ஸ்வாமிகளின் நவாவர்ண பூஜையும் நடைபெற உள்ளது. மேலும் காமாட்சி அம்மன் கோவிலில் டிசம்பர் 15 -ம் தேதி காலை 10 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம் ஸ்வாமிகளின் தலைமையில் நடைபெற உள்ளது.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதிலும் சிறந்தது பரமஹம்ச சந்நியாசிகளுக்கு பக்தி சிரத்தையுடன் கூடிய தானம் சமர்பித்தல். இந்த மகத்துவத்தை ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியாரின் கனகதாரா ஸ்தோத்திரம் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். ஆகவே ஸ்ரீ ஸ்வயம்ப்ரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் கோவை விஜயத்தின் போது பிக்‌ஷா வந்தனம் என்று சொல்லக்கூடிய தானம் மற்றும் நவாவர்ண பூஜை செய்து இறைவனின் அருளைப் பெறலாம். இறையருள் பெற அனைவரும் வருக. மேலும் விபரங்களுக்கு 9566655655, 9944099989, 9952414848.