கே.ஐ.டி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவில் உள்ள லிங்கன் பல்கலைக்கழக கல்லூரியின் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அமியா பாமிக் அவர்களும், கல்லூரி துணை தலைவர் இந்து முருகேசன் அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கே.ஐ.டி கல்லூரியின் வானூர்தி பொறியியல் துறையின் மாணவ மாணவியரின் கற்றல், செயல்திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வானூர்தி பொறியியல் ஆகிய துறைகளில் சர்வதேச தரத்தை எட்ட, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி செய்கிறது.

இன்றைய சூழலில் வானூர்தி பொறியியலில் நவீன தொழில்நுட்ப பயன்பாடுகளை மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையிலும், சம்மந்தப்பட்ட இந்தத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலும், இதற்காக திட்ட வரைவுகள் மற்றும் தொழிற்சாலைகளில் தொழில்நுட்ப பயிற்சி எடுத்தல், அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் மேற்கொண்டு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்தல் என மாணவர்களின் நலன் சார்ந்தவற்றை பாடத்திட்டத்தோடு இணைந்து அளிக்க, கே.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி மேற்குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் லிங்கன் பல்கலைக்கழக கல்லூரி மலேசியா நிறுவனத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. மேலும், தொழில்துறை எதிர்பார்ப்புகள் மற்றும் கல்வி பாடத் திட்டங்களுக்கு இடையேயான இடைவெளிகளை இணைப்பதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுகின்றது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி துணை தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், அனைத்து துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.