இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் எம்.சி.ஏ துறை சார்பாக CAIT – 2017 சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் செயலர் பிரியாசதீஸ்பிரபு மற்றும் முதல்வர் சின்னதுரை, எம்.சி.ஏ துறை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சர்வதேச கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக AICTE-யின் உறுப்பினர் செயலாளர் டாக்டர் ஏ.பி.மிட்டல் மற்றும், புளோரிடா பல்கலக்கழகத்தின் டேட்டா ஸ்டக்சர் துறையின் பேராசிரியர் டாக்டர்.சர்தஜ்சானி கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே கணினி குறித்தும், கணினியின் பயன்பாடு, அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் மிக விரிவாக உரையாற்றினார்.

மேலும் இக்கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து 1500 மாணவ மாணவிகள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்தும் கலந்து கொண்டனர். அத்துடன் 150 மாணவ மாணவியர்கள் கணினி குறித்து பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளும், கலந்துரையாடல்களையும் நிகழ்த்திக் காட்டினர்.