கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பாக பள்ளிகளில் அவசர கால செயல்முறை பயிற்சி

கோவை, கே.எம்.சி.எச் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவு (0-18வயது வரை) கடந்த 26 ஆண்டுகளாக தரம் உயர்ந்த சேவையை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு பள்ளியில் குழந்தைகள் கற்பதற்கும், ஊழியர்கள் பணியாற்றுவதற்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதே நிறுவனத்தின் பிரதான குறிக்கோளாகும். பள்ளி நிர்வாகிகளும், நெருக்கடி நிலையை கையாள்பவர்களும் இணைந்து செயல்பட்டு ஆரோக்கியமான சூழ்நிலையை பள்ளியில் உருவாக்க வேண்டும்.

அவசர நிலையை சமாளிக்க பள்ளி ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயல்திட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.அவசர கால விரிவான திட்டத்தில் அபாயம், நெருக்கடி நிலை பள்ளிக் குழந்தைகள் செய்யக்கூடிய மற்றும் கூடாத செயல்பாடுகளை பற்றி விளக்கமளிக்க வேண்டும். கே.எம்.சி.எச் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு, பள்ளி ஆசிரியர்களுக்கான அவசர கால தயார் திட்டத்தை நகரத்தில் உள்ள மற்ற அனைத்து ஆசிரியர்களுடன் தொடர் கல்வி நிகழ்வு மூலம் பகிரந்து கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதற்காக கே.எம்.சி.எச் மருத்துவமனையின் குழந்தைகள் இந்திய பேரவையின் 42வது ஆண்டு விழாவை Kongu Pedicon-2017 எனும் பெயரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி தொடங்கி வைத்தார். கோவை முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆஸ்துமா, வாய்ப்புகள், ஜீரணக் கோளாறுகள், கண், மூக்கு & தொண்டை பிரச்சனைகள் பற்றியும் அவற்றை கையாளும் முறைப் பற்றியும் கூறினார்கள்.