கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் 6வது மினி மாராத்தான் போட்டி

 

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பில் பொது மக்களிடையே சமூகம் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பை வலியுறுத்தி மினி மாராத்தான் போட்டி தொடந்து 6வது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டி பூமியில் உள்ள உயிரினங்களின் ஆரோக்கியத்திற்கும் வாழ்வாதரத்திற்கும் மரங்களும், மரங்களிலிருந்து கிடைக்கும் சுத்தமான காற்றும் முக்கியம் என்பதை வலியுறுத்தி நடத்தப்படும் இப்போட்டி டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கியது.

இதில் மொத்தம் 6 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் 5 கிலோமீட்டர் பிரிவில் ஆண்கள் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி, பெண்கள் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான போட்டி, 8 கிலோமீட்டர் பிரிவில் ஆண்கள் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி என பலர் இதில் கலந்து கொண்டனர். இப்போட்டியினை தொழில்நுட்ப கல்லூரி கல்லூரியின் முதல்வர் அகிலா, கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல்வர் பாலுசாமி, தொழில்நுட்ப கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எம்.நடராஜன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இதில் பல்வேறு பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் “தமிழ் தலைவாஸ்” கபடிக் குழுவின் வீரர் அஜித் குமார் மற்றும் கல்லூரி தலைவர் கே. பி. ராமசாமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.