முத்து’ஸ் மருத்துவமனையின் 2 வது கிளை திறப்பு விழா

 

சரவணம்பட்டி பகுதியில் முத்து’ஸ் எலும்பு மற்றும் பல் சிறப்பு மருத்துவமனையின் 2 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார், சிரவை ஆதினம் குமார மடாலயம் குமார குருபரர் சுவாமிகள், காமச்சிபுரி ஆதினம் சிவலிங்கேஷ்வர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு இக்கிளையை திறந்து வைத்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முத்து சரவண குமாரையும் அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தியும், ஆசீர்வதித்தும் இம்மருத்துவமனையை துவங்கி வைத்தனர்.
அதிநவீன மருத்துவ கருவிகள், சிகிச்சை முறைகள் கொண்டுள்ளது இந்த மருத்துவமனை. இதன் முதல் கிளை ஒண்டிபுதூரில் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இப்பொழுது சரவணம்பட்டி பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.