கடன் விண்ணப்பம் இனி இணையதளத்தில்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (யூ.ஒய்.இ.ஜி.பி) கடன் விண்ணப்பம் இனி இணையதளத்தில் பதிய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள் www.msmeonline.tn.gov.in/uyegpஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்கள் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ், கல்வி சான்றிதழ் GST எண்ணுடன் கூடிய விலைப்பட்டியல், திட்ட அறிக்கை, சாதி சான்றிதழ், ரூபாய் இருபது முத்திரை தாளில் சான்றுறுதி அலுவலர் முன்னிலையில் ஏற்ற உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் உள்ளிட்ட இரு நகல்களுடன் சமர்பிக்க வேண்டும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சம், சேவைத் தொழில்களுக்கு ரூ.3 லட்சம், வியாபாரத் தொழில்களுக்கு ரூ.1 லட்சம் முதலீட்டில் 25% மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.1,25,000லட்சம் வழங்கப்படும்.மேற்கண்ட இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படாத யூ.ஒய்.இ.ஜி.பி விண்ணப்பம் நேர்முகத் தேர்விற்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.