சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப்பின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் சார்பில் அணியின் வீரர்களுக்கான புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்காநல்லூர் ஆல்ஃபோட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ், பயிற்சியாளர் அக்பர் நவாஸ் மற்றும் அணியின் வீரர்கள் கலந்துகொண்டனர்.

ஐ லீக் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் இந்த அணியினருக்கு புதிய மூன்று ஜெர்ஸி அறிமுகப்படுத்தி அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அணியின் முதல் போட்டி நாளை மாலை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் தமிழ்நாடு சார்பில் விளையாடும் இந்த அணி ட்ரா என்ற புதிய அணியுடன்  மோத உள்ளனர். இந்த அணி கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் வெற்றி பெற்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ லீக் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் இந்த அணியினருக்கு புதிய மூன்று ஜெர்ஸி அறிமுகப்படுத்தி, அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அணியின் முதல் போட்டி நாளை நேரு விளையாட்டு அரங்கத்தில் மாலை நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் தமிழ்நாடு சார்பில் விளையாடும் இந்த அணியினருடன் ட்ரா என்ற புதிய அணியும் மோத உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் வெற்றி பெற்ற அணி என்பது குறிப்பிடத்தக்கது.