ஹார்ட் ரிதம் கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சார்பில் இதய துடிப்பில் எற்படும் பிரச்சனைகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு நாளை நவம்பர் – 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் இருதய வேக துடிப்பு மின்னியல் பிரிவு சார்பில்  ’கோவை ஹார்ட் ரிதம் சம்மிட் (Kovai Heart Rhythm Summit) இபி அப்டேட் 2019 (EP Update-2019)’ என்ற கருத்தரங்கு நாளை நவம்பர் 23 ஆம்  தேதி கோவை ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கானது இதய துடிப்பில் எற்படும் பிரச்சனைகள் குறித்தும் அவ்வாறு எற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையால்வது என்பதை  பற்றியும்,  இருதய மின் தூண்டல் அடிப்படைகள், அதிநவீன சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இருதயம் மெதுவாக மற்றும் வேகமாக செயல்படுதல் பற்றியும், இருதய செயல் இழப்பை தடுத்தல், புதிய மருந்து மேலாண்மை, இருதயம் செயலிழத்தலை தடுக்கும் கருவிகள் கொண்ட சிகிச்சை போன்ற தலைப்புகளில் இந்த கருத்தரங்கில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான இருதய நோய்   மருத்துவர்கள் பேசவுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோவையில் நடக்கும் சீரான இருதய  மின்துடிப்பு பற்றிய இந்த கருத்தரங்கில், தென்னிந்தியாவில் உள்ள  பல இருதய நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். இக்கருத்தரங்கில்  Dr.Laszio Geller – Professor of Cardiology, Semmelweis University, Budapest, Hungary கலந்து கொண்டு இருதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பது பற்றி பேசவுள்ளார். கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான புகழ் பெற்ற 30 -க்கு மேற்பட்ட மருத்துவ கல்வியாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்று கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர். நல்லா ஜி பழனிசாமியும், கருத்தரங்கின் அமைப்பு செயலாளர் டாக்டர். லாரன்ஸ் ஜேசுராஜும் கூறினார்கள்.