இலவச மருத்துவ முகாம்

பொள்ளாச்சி மின்னல் மகாலின் மண்டல தலைவர் அரிமா மகேஷ் குமார் தலைமையில், அரிமாக்களின் மண்டல மாநாடு சந்திப்பு நடைபெற்றது. இம்மாநாட்டில் கோவை அரிமா சங்கம், கே.எம்.சி.எச் மருத்துவமனையுடன் இணைந்து, இலவச மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, எலும்பு சம்பந்தமான பரிசோதனை, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இம்முகாமில் மருத்துவர் குழுக்கள் 450க்கும் மேற்பட்ட அரிமாக்கள், பொது மக்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.