பறவை காதலன் பக்ஷிராஜன்

இந்த உலகத்தில் அனைத்து விதமான உயிரினங்களும் இருகின்றன. அதில், மனிதராகிய நம்முடன் நெருங்கி இருப்பவைகளில் பறவைகளும் ஒன்று. இவை வெறுமனே வானில் பறந்து செல்பவை அல்ல. மனிதனுக்கு வழிகாட்டுவதிலும், இயற்கை மற்றும் பசுமை வனங்களை அதிகப்படுத்துவதிலும் இவைகள்  முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பறவைகளை பற்றி பேசும்பொழுது பறவைகளின் காதலனாகிய சாலிம் அலியை பற்றி பேசாமல் இருக்க முடியாது. யார் இவர் என்று கேற்பவர்களுக்கு 2.o படத்தில் வரும் பக்ஷிராஜன் கதாபாத்திரம் தான் இந்த சாலிம் அலி என்பது தான் பதில்.

படத்தில் இவரை வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அப்படியென்றால் இவர் வில்லனா? என்றால், ஆம் இவர் வில்லன் தான். பறவைகளுக்கு தீங்கு நினைப்பவர்களுக்கு இவர் வில்லன் தான். அப்படிப்பட்ட தீராத காதல் இந்த பறவைகளின் மேல் இவருக்கு இருந்தது. இத்தகைய இந்தியாவின் பறவை மனிதர், பறவையியலாளர் மற்றும் இயற்கையியாளரான சாலிம் அலி என்ற அந்த வரலாற்று பக்ஷிராஜனின் பிறந்தநாள் இன்று (12.11.2019).

இவரது சிறுவயதில் விளையாட்டாக தனது முதல் வேட்டையை ஆரம்பிக்க அதில் போன முதல் உயிர் ஒரு சிட்டுக்குருவியுடையது. இறந்த பிறகு அதனை எடுத்து பார்த்த பொழுது, அதன் கழுத்து பகுதியில் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. இதனை கண்டு இது என்னவாக இருக்கும், இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்  என்று ஆரம்பித்த தேடல் ஆர்வம், வாழ்வின் இறுதி வரை புதிது புதிதாக தேடிக்கொண்டே இருந்தது. இதன் பலன் இந்தியாவின் பறவை மனிதர், பறவையியாளர் மற்றும் இயற்கையியாளர் என்ற பெயர். நம் நாட்டில் பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் வரை இவரது பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும். படத்தில் இவரை வில்லனாக சித்தரித்திருக்கலாம், ஆனால், உண்மையில் இவர் ஹீரோ தான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*