6 கிராமங்களில் ’ஜனனி ஜோதி’ பிரச்சாரம்

கோவையில் விழிப்புணர்வு பிரச்சாரமான ‘ஜனனி ஜோதி’ நிகழ்வுக்குக்கு கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

கர்ப்பிணிகளுக்கு உடல்நலம், சுகாதாரம், ஊட்டச்சத்து ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்கும் முன்முயற்சி நோக்கில், கோவையில் இரண்டு நிலைகளில் இப்பிரச்சாரத்தை நடத்தியது. முதல் நிலையில், இந்நிறுவனத்துடன் பதிவுசெய்யப்பட்ட எலக்ட்ரீஷியன்களின் கர்ப்பிணி மனைவிகளுக்கு மகப்பேறு நல்வாழ்வு பொருட்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது நிலையில், நாடு முழுவதும் கிராமப்புறங்களிலிருந்து முன்பதிவு செய்த கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நல்வாழ்வு பொருட்கள் பாக்கெட்டுகளில் விநியோகிக்கப்பட்டன.

கர்ப்பிணிகள் குறித்த முறையான கல்வி, மருத்துவ வசதிகள் குறித்த தகவல்கள் கவுண்டம்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், சாமிசெட்டிபாளையம், புத்தூர் மற்றும் கணேசபுரம் ஆகிய 6 கிராமங்களில் ‘ஜனனி ஜோதி’ பிரச்சாரம் முழுவீச்சில் நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்தில் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.

இதுகுறித்து கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குநர் அர்ச்சனா குப்தா கூறியதாவது, “கே.இ.ஐ, சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் சமூக நல முயற்சிகளை மேற்கொள்வதில் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் ப்ராண்ட் ஆகும். சரியான நேரத்தில் சரியான முறைகள் மூலம் பிரசவம் குறித்த விழிப்புணர்வுக் கல்வியைக் கற்பிப்பதன் மூலம், தாய் மற்றும் குழந்தை இருவரின் வாழ்க்கைத் தரத்தையும் நீண்ட காலம் மேம்படுத்தும்” என்றார்.