ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேலாண்மையியல் துறைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கான பேராசிரியர்களின் பங்களிப்பு, புதிய உத்திகள் குறித்து துறை வல்லுநர்கள் பேசினர். இதில் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கருணாகரன் மேலாண்மையியல் துறைத் தலைவர் ஜெயந்தி, சிறப்பு விருந்தினர்கள் கலசலிங்கம் பல்கலைக்கழக மேலாண்மையியல் துறைத் தலைவர் மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரமேனன், கே.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் ரங்கநாதன், மேலாண்மையியல் துறைப் பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.