என்.ஜி.பி  கலைக் கல்லூரியில் ‘லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்’

 

டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் காளப்பட்டி கிளை இந்தியன் வங்கியும் இணைந்து நடத்திய ‘லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் -2019’ என்ற நிகழ்ச்சி “நேர்மை ஒரு வாழ்க்கை முறை ” என்ற தலைப்பில்  என்.ஜி.பி. அவ்வை அரங்கில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக  லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சுரேஷ்குமார், காளப்பட்டி கிளை இந்தியன் வங்கி மேலாளர்  சீனிவாசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் இன்றைய காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் திட்டம் மற்றும் அதன் சவால்கள் குறித்தும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்ச ஒழிப்பின் அவசியம் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்கள்.  மேலும், மாணவர்கள் மத்தியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உறுதி மொழி எடுத்தனர்.

இந்நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான நமச்சிவாயம், ரீனாராணி மற்றும் நரசிம்மன், நன்னடத்தை குழு ஒருங்கிணைப்பாளர் ரங்க ராமானுஜம் ஆகியோர்கள் ஏற்பாடு செய்தனர்.