குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன மிதவைபேருந்து இயக்கம்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பயணிகளின் வசதியை கருதி தற்போது குளிர்சாதனப் பேருந்து புறநகர் வழி தடங்களை கோவையிலிருந்து சேலம், திருச்சி போன்ற ஊர்களுக்கு (கோவை கோட்டம் சார்பில்) தற்போது இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகள் 3X2 என்ற இருக்கை அமைப்பின்படி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகளில் சேலம் செல்ல ரூ.190/-ம், திருச்சிக்கு ரூ.225/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மற்ற தனியார் பேருந்தின் கட்டணத்தை காட்டிலும் இப்பேருந்து குறைவான கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் மனம், உடல் சோர்வின்றி பயணிக்க ஏதுவாக இயக்கப்படுகிறது.

சிங்காநல்லூரிலிருந்து திருச்சிக்கு காலை 07.15, மதியம் 02.45, இரவு 09.15 மணிக்கும், மறுமார்கமாக திருச்சியிலிருந்து காலை 05.55, மதியம் 01.40, இரவு 09.15 மணிக்கும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து காங்கேயம் மற்றும் கருர் ஆகிய ஊர்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வகையில் இயக்கப்படுகின்றது.

இதே போன்று காந்திபுரம் மத்திய பேருந்துநிலையத்தில் இருந்து சேலத்திற்கு காலை 06.36, 07.40, மாலை 04.02, 05.33 மணிக்கும், மறுமார்கமாக சேலத்தில் இருந்து காலை 11.50, மதியம் 12.15, இரவு 09.36 மற்றும் 11.40 மணிக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

இது பொது மக்கள் குளிர்சாதன பேருந்தில் சொகுசாக உடல் மற்றும் மன சோர்வின்றி பயணம் செய்யலாம்.