நாட்டின் முன்னேற்றத்திற்கு புதிய முயற்சிகள் தேவை

– பங்கஜ் மிட்டல்

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுரியின்  16 வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

2018 கல்வி ஆண்டில் படித்து முடித்த மாணவர்கள், பட்டம் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவில் 617 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் இந்திய பல்கலைக்கழக சங்கத்தின் பொதுச்செயலாளர் பங்கஜ் மிட்டல் மற்றும் விழாவின் முதன்மை விருந்தினராக ரென்ட்லி சாப்ட்வேர் டெவலப்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பிஜாய் சிவன் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பங்கஜ் மிட்டல் பேசுகையில், சுற்றுச்சூழல் மற்றும் நகர்ப்புற சூழலைப் பாதுகாப்பதற்கும்,  தேசிய வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் தேவையான புதிய முறைகள் மற்றும் தயாரிப்புகள் கண்டுபிடிப்பதன் அவசியத்தை கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ரத்தினம் குழும நிறுவனங்களின் தலைவர் மதன் ஏ செந்தில், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முரளிதரன் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் தினகரன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தார்.