தங்கம் வென்ற ஈசா கல்லூரி மாணவர்கள்

அண்ணா பல்கலைக்கழக 10வது மண்டல அளவிலான தடகளப் போட்டியில் ஈசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றனர்.

ஈசா பொறியியல் கல்லூரியை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் 1500மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் மற்றும் 800மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும் பெற்றார். இதுமட்டுமல்லாமல் பரணி தேவி என்ற மாணவி உயரம் தாண்டும் பிரிவில் தங்கப்பதக்கமும் வென்றார். போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற இவர்களை கல்லூரியின் முதல்வர் ராபர்ட் கென்னடி பாராட்டி பரிசினை வழங்கினார். மாணவர்களுக்கு கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி அஜித், தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.