வளர்ச்சி பாதையில் 68வது வார்டு

கோவையில், வளர்ச்சி பாதியில் 68வது வார்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை கொடியேற்றி துவக்கி வைத்தவர் J.ரமேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர், பாஜக. எம்.குணசேகரன் வரவேற்புரையாற்றினார். வி.சி.ராஜன் முன்னுரை வழங்கினார்.கவிதா ராஜன் தலைமை வகித்தார். சி.ஆர்.நந்தகுமார், மாவட்ட தலைவர்.பாஜக, 200வது மரத்தை நட்டு சிறப்புரையாற்றினார். எஸ்.ஆர்.சேகர், மாநில பொருளாளர், பாஜக, மக்கள் பக்கம் அறிக்கை தாள் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீட்டை பெற்றுக்கொண்டவர்கள் ஊர் பெரியவர்கள் நித்யானந்தன், கம்பளி ராமசாமி, ஜெகதீஷ். மேலும் 50 பெண் உறுப்பினர்கள் கட்சியில் இணைப்பு, வாழ்வாதாரம் உதவித்தொகை வழங்குதல், புதுப்பிக்கப்பட்ட இன்சுரன்ஸ் வழங்குதல் நடனம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.