பிகிலை பின்னுக்குத் தள்ளிய பிக் பாஸ் கவின் !

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் கவின், சேரன், லாஸ்லியா,ஷெரின் ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருந்தனர்.

இவர்களில் வழக்கம் போல் இந்தவாரமும் கவின் தனது ரசிகர்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #WeAdmireKavin என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கவினின் புகழ் பாடி வருகின்றனர்.

ஆரம்பத்தில் சாக்‌ஷியுடனான காதல், அதையடுத்து லாஸ்லியாவுடனான காதல் என பிக்பாஸ் வீட்டின் காதல் மன்னனாக வலம் வரும் கவினை, அவரது நண்பர் பிரதீப் கன்னத்தில் அறைந்து அவர் செய்யும் தவறைச் சுட்டிக் காட்டினார். அதேபோல் லாஸ்லியாவின் தந்தை கவினை எதிர்கொண்ட விதமும் கவினுக்கு எதிர்மறையான விமர்சனங்களாக அமைந்தன.

கடந்த வாரத்தில் லாஸ்லியாவுக்காக சாண்டியிடம் கவின் நடந்துகொண்ட விதமும் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் கவினுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதற்காக #WeAdmireKavin என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர் கவின் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக் பிகில் இசைவெளியீட்டு விழா ஒளிபரப்புக்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்கை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.