புதிய கண்டுபிடிப்புகள் பயனுடைய நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்

– கம்சா சூரியட்டி முகமது

இந்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம், இந்திய அறிவியல் கழகத்தின் கோவை பிரிவு ஆகியவற்றின் நிதியுதவியுடன் கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியும் தாய்லாந்து மகாசர்ஹம் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் துறையும் இணைந்து நடத்தும் ” சமூக மேம்பாட்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகளின் தாக்கம்” என்னும் தலைப்பில் 19.9.2019 முதல் 21.9.2019 வரை மூன்று நாட்கள் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கின் துவக்க விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் மலேசியா, சுல்தான் சைனல் அபிதின் பல்கலைக்கழக உயிர் வளங்கள் மற்றும்  உணவுத்தொழில் துரையின் முதன்மையர் கம்சா சூரியட்டி முகமது அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், “அண்மைக் காலமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலககெங்கும் புதிய கண்டுபிடிப்புகள் பரவலாகச் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவை சமூக  மேம்பாட்டில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் போதுதான் அவை பயனுடையதாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

கல்லூரி செயலர் மற்றும் இயக்குனர் வாசுகி காணொளி காட்சியின் வாயிலாகத் தலைமையுரையாற்றினார். 300க்கும் மேற்பட்ட பேராளர்கள் வழங்கிய கருத்தரங்க ஆய்வுச்சுருக்கத்தின் தொகுப்பை இந்தூர், தேவி அகல்யா பல்கலைக்கழகத்தின் வாழ்க்கை அறிவியல் துறைப் பேராசிரியர் சுரேஷ் சந்த் அவர்கள் வெளியிட கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் கல்விப்புல முதன்மையர் பாலசுப்பிரமணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார். முன்னதாகக் கல்லூரியின் முதல்வர் லட்சுமணசாமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் உயிர்வேதியியல் துரையின் உதவிப்பேராசிரியரும் கருத்தரங்க நோக்கவுரையாற்றினார்.

தாய்லாந்து மகாசர்ஹம் பல்கலைக்கழகத் தொழில்நுட்பத்துறையின் முதன்மையர் அனுமுங்கிரம் தொடக்கவுரையாற்றினார். அவரது தொடர்ந்து கொங்குநாடு கல்லூரியின் முதன்மை நிர்வாக அலுவலர் சின்னுசாமி அவர்களும் ஆராய்ச்சிப்புல முதன்மையர் பால்சாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார். தொடக்க விழாவின் நிறைவில் தாய்லாந்து மகாசர்ஹம் பல்கலைக்கழக உயிரித்தொழில்நுட்பவியல் துரையின் உதவிப்பேராசிரியர் பரியபொன் இஸ்டார்னுவட் நன்றி உரையாற்றினார். தொடக்கவிழவைத்தொடர்ந்து கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற்றன. மூன்று நாள் நடைபெரும்  இக்கருத்தரங்கில் மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலக்களிலிருந்தும் அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் திறளாகப் பங்கேற்றக உள்ளனர்.